Call for participation/Appeal letter/ta

From Strategic Planning

Please note: this text is ready for translation, but please do not distribute it yet.


பத்தாண்டுகளுக்கு முன்பாக விக்கிப்பீடியா எனும் தொகுப்பு இல்லாதிருந்தது என்பதை நினைக்கவும் இயலவில்லை. இன்று 330 மில்லியன் மக்கள்ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் உலகின் மிகக் கூடுதல் அணுக்கங்களைப் பெறும் இணைய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. நூறாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பல விக்கிப்பீடியா திட்டங்களை கடந்த எட்டு ஆண்டுகளில் உருவாக்கி நிர்வகித்து வருகிறார்கள்.

நமது சாதனைகள் அரியவாம், ஆயினும் அனைத்து மாந்தரும் கற்றறிந்த அறிவுக்கடலில் ஒவ்வொருவரின் இலவச பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்ற செல்ல வேண்டிய தொலைவு இன்னும் பல கல் இருக்கிறது. நமது சாதனைகளின் படியேறி எதிர்கொள்ளவிருக்கும் தடைகளை வெற்றிகொள்வது எப்படி? உலக மக்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கே இணைய அணுக்கம் உள்ளது. இன்று நூறாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் விக்கிப்பீடியா திட்டங்களுக்கு பங்களித்து வருகின்ற போதிலும்,அவர்கள் பன்மயப்பட்ட உலகின் முழுமையான பிரதிநிதிகள் இல்லை.இலவச அறிவை உலகெங்கும் உருவாக்கவும் பகிரவுமான இயக்கத்தை உருவாக்க முயலும் நமக்கு பல வழிமுறைகள் உள்ளன.

விக்கிமீடியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஓர் வினைமுறைத் திட்டத்தை வடிவமைக்குமாறு ஆண்டு முழுமைக்குமான செயல்முறையொன்றை துவங்குகிறோம்.குறிப்பாக, நாம் புரிந்துகொள்ள வேண்டியன:

  • இப்போது எங்கிருக்கிறோம்?
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கிருக்க விரும்புகிறோம்?
  • அவ்விலக்கை எவ்வாறு அடைய விருக்கிறோம்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தேட உதவுங்கள். அலசுங்கள், சிறுகூறாக்குங்கள்,நமது நோக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் அவற்றின் தாக்கத்தை சிந்தியுங்கள். நீங்கள் உதவக்கூடிய ஐந்து வழிகள் இங்குள்ளன:

  • சிறப்புப் பணிக்குழு ஒன்றில் சேருங்கள். பல்வேறு கட்டுரைப் பொருட்களை ஆராய்ந்து அவை குறித்த பரிந்துரைகளை வெளியிட சிறப்புப் பணிக்குழுக்களை அமைக்கிறோம். அவற்றில் இணையுங்கள், அல்லது உங்கள் தனிக்குழுக்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
  • எவ்வாறு உதவ இயலும் எனத் தெரிவியுங்கள். ஏதேனும் துறையில் நீங்கள் வல்லுனராக இருப்பின், வல்லுனர் தரவுபட்டியலில் சேருங்கள். சிறப்பு பணிக்குழுக்களும் பிற தன்னார்வலர்களும் உங்களிடம் கேள்விகள் எழுப்ப உதவும். உங்களுக்கு நேரமிருக்கும்போது பதிலிறுக்கலாம்.
  • எண்ணங்களை பதித்திடுக.விக்கி வினைமுறைத் திட்டத்திற்கான செயல்முறை ஒன்றை தீட்டிடுங்கள், ஏற்கெனவே அங்குள்ள செயல்முறைகளை மேம்படுத்தியோ ஒழுங்கமைத்தோ உதவுங்கள். உங்கள் எண்ணங்களை உங்கள் வலைப்பதிவிலும், மின்னஞ்சல் குழுக்களிலும்,சமூக பிணையங்கள்..Identi.ca, டிவிட்டர், மற்றும் ஃபேஸ்புக் முதலியவற்றில் வெளியிடுங்கள். அவ்வாறான பதிவுகளை #wikimedia எனக் குறிப்படுத்தினால் அல்லது பிறர் காணுமாறு அவற்றிற்கு விக்கி வினைமுறைத் திட்டத்திற்கான பக்கத்தில் தொடுப்பு கொடுங்கள்.
  • வினைமுறைத்திட்டத்தைக் குறித்த உரையாடல்களை நடத்துங்கள். நல்ல திட்டங்களை வரைவதில், எங்களுக்கு பரந்த பங்களிப்புத் தேவை. சிறப்புப் பணிக்குழுக்கள் விக்கிமீடியாவின் வருங்காலத்தைக் குறித்து கருத்துக்கொண்டுள்ள ஒவ்வொருவருடனும் உரையாடுவது என்பது இயலாதவொன்றாகும்.இங்கு உங்கள் உதவி தேவை: நீங்களே வினைமுறைத்திட்டத்தினைக் குறித்த உரையாடல்களை,தனித்தோ அல்லது இணையத்திலோ, துவக்கி தீர்வுகளை விக்கி வினைமுறைத்திட்டப் பக்கதில் வெளியிடுங்கள்.அவற்றிற்கான வார்ப்புருக்களும் உரையாடல்களை நடத்திட உதவும் கருவிகளும் இங்குள்ளன.
  • பேசுங்கள். உங்கள் பின்னூட்டங்களை இக்குழுவிற்கு கொடுங்கள். உங்கள் கருத்துகள், எதிர்பார்ப்புகள், பயங்கள், திட்டத்திற்கான இலக்குகள் இவற்றை கூறுங்கள். விக்கிமீடியா வினைமுறை திட்டப் பக்கத்தில் பின்னூட்டமிடுங்கள் அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள்: strategywikimedia.org.

பங்களிக்க இயலாவிடின், இத்தகைய இன்றியமையா திட்டத்திற்கு துணை நிற்க நன்கொடைதர இயலுமா? உங்கள் நன்கொடை உலகளாவிய இலவச அறிவுப் பெட்டக வளர்ச்சிக்கு நேரடியாக உதவும். தவிர, திட்டங்களுக்கு பங்களிக்கவும்,தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும்,மற்ற பிற உதவிகளுக்கும் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.

இந்த நூற்றாண்டு நமது சமூக வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய மற்றும் அனைத்து மக்களுக்கும் சரிசம வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினை நமக்கு அளித்துள்ளது. இப்புவியினில் உள்ள அனைவருடனும் அறிவைப் பகிர நாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் நீங்களும் இணைவீர்கள் என நம்புகிறோம்.

உங்கள்,
மைக்கேல் ஸ்னோ
தலைவர், விக்கிமீடியா நிறுவனம்
ஜிம்மி வேல்ஸ்
நிறுவனர்,விக்கிப்பீடியா மற்றும் விக்கிமீடியா நிறுவனம்


மின்னஞ்சல் மறுமொழி

விக்கிமீடியா நிறுவனத்தின் வினைமுறை மேம்படுத்தல் குழுவிற்கு மின்னஞ்சல் செய்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது மற்றும் விரைவாக படிக்கப்படும். சிறப்பு பணிக்குழு ஒன்றிற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரைவில் தொடர்பு கொள்வோம். (http://strategy.wikimedia.org)தளத்தில் உள்ள கருவிகளை வைத்து நீங்களே ஓர் சிறப்பு பணிக்குழுவினை அமைத்துக்கொள்ள முடியும். அக்குழுவின் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் எங்களுக்கு அனுப்பவும். .

வாழ்த்துகள், உதவிட விழைந்தமைக்கு நன்றி.

நட்புடன்,

தள அறிக்கை

  • {{SITENAME}} மற்றும் அதன் பிற திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உதவுவீர்! <br />மைக்கேல் ஸ்னோ மற்றும் ஜிம்மி வேல்ஸ் இவர்களின் <a href="http://volunteer.wikimedia.org">கடிதத்தைக்</a> காண்க.

தலைப்பு

மைக்கேல் ஸ்னோ மற்றும் ஜிம்மி வேல்ஸ் இவர்களின் கடிதத்தைக் காண்க.