May 2011 Update/ta

From Strategic Planning

வணக்கம்,

நான் டிங் சென், விக்கிமீடியாவின் அறங்காவலர் குழுவின் அவைத் தலைவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, விக்கிமீடியா நிறுவனம் பங்களிப்பாளர்களின் காலப்போக்கு படிப்பினைகளை வெளியிட்டு இருந்தது, (அவற்றைக் காண இங்கே சொடுக்கவும்) அதாவது கடந்த பல ஆண்டுகளாக விக்கிமீடியா பயனர்கள் விக்கிமீடியா திட்டங்களைத் தொகுப்பது என்பது எளிதில் முடியாத ஒரு காரியமாக இருந்து வந்தது. கடந்த மாதம் விக்கிமீடியா திட்டக் குழு இதனைப் பற்றிய நீண்டதொரு விவாதத்தில் ஈடுபட்டு இருந்தது, மேலும் அதனையடுத்து நாங்கள் ஒரு இணக்கமான அறிக்கைக்கு அனுமதி பெற்று உள்ளோம் ஆகவே விக்கிமீடியாவை மேலும் கட்டற்றதாகவும் அதிக அளவிலான கூட்டுச் செயல்பாடு கொண்டதாகவும் மாற்றுவதில் தங்களின் உதவியை நாடுகிறோம்.

தயவு கூர்ந்து எங்களின் தீர்மானங்களை படியுங்கள், அதோடு நின்று விடாமல் உங்களின் கருத்துக்களையும் பகிரும்படி வேண்டிக் கொள்கிறோம்.

வாழ்த்துகள், தாங்கள் விக்கிமீடியா திட்டங்களுடன் இணைவதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிங் சென்
அவைத்தலைவர் - விக்கிமீடியா அறங்காவலகம்

தீர்மானம்: வெளிப்படை

நாங்கள், விக்கிமீடியா அறங்காவலகம் நமக்கிடையே இருக்கும் ஆரோக்கியமான தொடர்பை நிலைநிறுத்துவது என்பது நமது கொள்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமான ஒன்று என நம்புகிறோம். விக்கிமீடியா திட்டங்களின் வெளிப்படையான கலாச்சார, பங்களிப்புடன் கூடிய நேர்த்தியான தன்மை; இதனை உலகின் மிகப் பெரிய மனித அறிவுக்களஞ்சியமாக மாற்றியுள்ளது எனலாம். ஆனால், விக்கிமீடியாவின் பங்களிப்பாளர்களும் - வாசகர்களும் - ஆதரவாளர்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கும் அதே சமயத்தில் பங்களிப்பாளர்களும், புதிய பங்களிப்பாளர்களும் இருப்பது குறைந்துள்ளது என்பதை தற்போதைய பங்களிப்பாளர்களின் காலப்போக்கு படிப்பினைகள் தெரிவிக்கின்றன.

எங்களின் ஐந்து ஆண்டின் தளத்தகை திட்டம், மேற்சொன்ன கண்டறிவுகளின் அடிப்படையிலும், விக்கிமீடியா புதிய மற்றும் வித்தியாசமான மேலும் இருக்கக் கூடிய பங்களிப்பாளர்களைக் கவரும் பட்சத்தில் அமைய வேண்டும் என்ற தேவை ஏற்பட்டு உள்ளது, மேலும் முன்னமே இருக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த பங்களிப்பாளர்களையும் தக்கவைக்க வேண்டும் என்னும் அவசியமும் ஏற்பட்டு உள்ளது. ஒரு நிலையான நீண்ட கால பங்களிப்பாளர்களைக் கொண்ட சமுகம் ஒன்றைக் கொண்டு இருப்பது என்பது கடிமான சூழ்நிலைகளில் ஒன்று ஆகும், மேலும் அவர்களைக் கொண்டு இருப்பதே; நமது தற்போதைய, வருங்கால திட்டங்களை தரத்துடன் விளங்கவைக்கும்.

இதனைச் சந்திப்பதே எங்களின் முன் இருக்கும் முதன்மையான சவால் ஆகும். நாங்கள் அனைத்து பங்களிப்பாளர்களையும், இந்த சவால்களைப் பற்றி உங்களின் விக்கிமீடியா திட்டத்திற்கான வேலைகளில், தினசரி சிந்திக்குமாறு வேண்டுகிறோம். இந்த விடயத்தில் முன்னுரிமை தரவிருப்பத்திலும், இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்களை அறங்காவலக வளங்களை உபயோகிப்பதிலும், திட்டக் கூட்டுக் குழுவை அனுகுவதிலும், திட்டக் கூட்டுக்குழு நடவடிக்கைகளிலும் மேலும் தொழில் நுட்ப முன்னேற்பாடுகளிலும், செயலக அதிகாரியை முழுவதுமாக நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் விக்கித்திட்டங்களை அணுகுவதிலும், அவர்களை வரவேற்பதிலும், ஒத்துழைப்பு நல்குவதிலும்; உருவாக்கியாளர்கள், பங்களிப்பாளர்கள் ஆகியோரையும் ஆதரிக்கிறோம்.

மேற்குறிப்பிட்ட முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபட, அறங்காவலகம் உதவுமளவுக்கு உள்ள உங்களின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எங்களின் நோக்கங்கள்: வெளிப்படை மற்றும் பங்களிப்பு விரிவு அடைவதற்கான புதிய கருத்துக்களை வரவேற்கிறோம்.

கட்டற்ற தன்மையையும் கூட்டுநுட்பத் தன்மையையும் அதிகரிக்க நாங்கள் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறோம்

  • புதிய பங்களிப்பாளர்களை பொறுமையுடனும், கருணையுடனும், மரியாதையுடனும் அணுகுங்கள்; புதிய பங்களிப்பாளர்கள் அணுகக் கூடிய சவால்களைப் பற்றிய தெரிந்து கொள்ளுங்கள், மேலும் அதனடிப்படையிலே அவர்களை அணுகுங்கள்; மேலும் அவர்களை பிறருக்கும் இவற்றையே செய்திட ஊக்கம் அளியுங்கள்.
  • திட்டங்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல்; கொள்கை மற்றும் அறிமுகங்களை எளிதாக்குதல்; மேலும் சக பங்களிப்பாளருடன் இணைந்து பங்காற்றி கொள்கைகளை மேலும் தோழமை உள்ளதாக்குதல்; மேலும் வார்ப்புருக்கள், எச்சரிக்கைகள் மற்றும் நீக்குதல் போன்றவற்றை செய்தல்.
  • உருவாக்கல் மற்றும் நேராக்கப் பட்ட பயன்பாடுகள் (features) கொண்ட கருவிகளை (tools) உருவாக்குதல் மூலம் பயன்பாட்டை அதிகரித்தல் (usability) மற்றும் அணுகுதல்களை (accessibility) அதிகப் படுத்த முடியும்.
  • மேற்கண்ட பிரச்சனைகள் பற்றி சமுதாயத்தை விழிப்படையச் செய்தல் மேலும் தனி நபரையும், குழுக்களையும் அணுகுதல்.
  • சக ஊழியருடன் பங்காற்றுவதன் மூலம், வாதங்களை குறைக்கலாம் மேலும் மிகத் தோழமையுடனும் கட்டுரைகளை உருவாக்கலாம், பங்களிப்பு கலாச்சாரமும் உயரும், மேலும் அதீத நன்றியுடனும் ஊக்குவிப்புடனும் நேர்த்தியான முயற்சிகளையும், நல்ல சமுக நடத்துனர்களையும் உருவாக்க முடியும்; மேலும்
  • சக ஊழியருடன் பங்களிப்பதன் மூலம் சிறந்த பயிற்சிகளையும் விருந்தோம்பல் குண நலனுடனுடன் பங்களிக்க முடியும்.

மேற்கோள்கள்